நாடு தவறான பாதையில் பயணிப்பதாக பிரெஞ்ச் பிரதமர் எச்சரிக்கை

நாடு தவறான பாதையில் பயணிப்பதாக பிரெஞ்ச் பிரதமர் எச்சரிக்கை

நாடு தவறான பாதையில் பயணிப்பதாக பிரெஞ்ச் பிரதமர் எச்சரிக்கை

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

12 Aug, 2020 | 12:53 pm

Colombo (News 1st) பிரான்ஸில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணித்தியாலங்களில் இரட்டிப்பாகியுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஜீன் கஸ்டெக்ஸ் (Jean Castex) தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த 2 வாரங்களாக தவறான பாதையில் பயணிப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமையிலிருந்து பிரான்ஸில் 1,397 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, 5000 இற்கும் அதிகமானவர்கள் ஒன்றுகூடுவதற்கு விதிக்கபட்ட தடை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொது வௌியில் முகக்கவசம் அணிவதைத் தூண்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரெஞ்ச் பிரதமர் Jean Castex, அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்