தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய

எழுத்தாளர் Staff Writer

12 Aug, 2020 | 1:08 pm

Colombo (News 1st) தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கலாநிதி ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது பெயர் விபரங்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஹரினி அமரசூரிய பிரித்தானியாவின் எடின்பேர்க் பல்கலைக்கழகத்தில் சமூக மானுடவியல் கலாநிதிப் பட்டம் பெற்றவராவார்.

அவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளர் என்பதுடன், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் முன்னாள் செயலாளராவார்.

அரசியலமைப்பை மறுசீரமைப்பது தொடர்பாக மக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் குழுவின் அங்கத்தவராக செயற்பட்ட கலாநிதி ஹரினி அமரசூரிய, தேசிய மக்கள் சக்தியின் கூட்டணி அமைப்பான தேசிய புத்திஜீவிகள் சங்கத்தின் கல்விக் கொள்கைகள் வகுப்புக் குழுவின் உறுப்பினருமாவார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்