இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் – தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் – தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Aug, 2020 | 5:33 pm

Colombo (News 1st) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை (Gopal Baglay) தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சந்தித்தனர்.

இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள அருணாசலம் அரவிந்தகுமார், வீ.இராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம், எம்.வேலுகுமார், எம்.உதயகுமார் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்திய உயர்ஸ்தானிகருடன் இதன்போது சுமூகமான பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்