வவுனியாவில் பஸ் மோதி முதியவர் உயிரிழப்பு

வவுனியாவில் பஸ் மோதி முதியவர் உயிரிழப்பு

by Staff Writer 11-08-2020 | 3:58 PM
Colombo (News 1st) வவுனியாவில் பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த முதியவர் மீது பஸ் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். வவுனியாவில் பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த முதியவர் மீது பஸ் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். பின்னோக்கி செலுத்தப்பட்ட பஸ் மோதியதில் தடுமாறி கீழே வீழ்ந்த முதியவர் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்தில் போகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 77 வயதான முதியவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.