கொரோனா தடுப்பு மருந்து ரஷ்யாவில் கண்டுபிடிப்பு

கொரோனா தடுப்பு மருந்து ரஷ்யாவில் கண்டுபிடிப்பு

by Bella Dalima 11-08-2020 | 4:52 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான முதல் தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். இதுபற்றி அரச அதிகாரிகளுடனான கூட்டத்தில்,
எனக்குத் தெரிந்து கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு எதிரான தடுப்பு மருந்து உலகிலேயே முதன்முறையாக இன்று காலை தான் பதிவு செய்யப்படுகிறது. இந்தத் தடுப்பு மருந்தின் உற்பத்தியை வருங்காலத்தில் விரைவில் தொடங்க முடியும் என்று நம்புகிறேன். என்னுடைய மகள்களில் ஒருவருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இந்தப் பரிசோதனை முயற்சியில் அவரும் அங்கம் வகிக்கிறார். அவருக்கு முதன்முறையாக தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட பிறகு உடல் வெப்ப நிலை 38 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. அடுத்த தினம், 37 டிகிரி செல்சியஸ் ஆனது
என ரஷ்ய அதிபர் கூறியுள்ளார். இந்த தடுப்பு மருந்து பாதுகாப்பானது என ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் மிக்கேல் முராஷ்கோ குறிப்பிட்டுள்ளார்.