by Bella Dalima 11-08-2020 | 4:25 PM
Colombo (News 1st) திருத்தப்பட்ட இந்து வாரிசு சட்டத்தின் படி பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு என இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் '2005 இந்து வாரிசு சட்டத்திருத்தம்' தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது,
திருத்தப்பட்ட இந்து வாரிசு சட்டத்தின் படி மகனைப் போன்று மகளும் சொத்தின் சம பங்கை பெறும் உரிமை உள்ளது.
சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக சொத்துதாரர் இறந்திருந்தாலும் பெண்ணுக்கு சம பங்கு பெறும் உரிமை உள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.