ஹம்பாந்தோட்டை விமான நிலையத்திற்கு அண்மையில் “CHINA SW” வடிவில் நிமாணிக்கப்பட்டுள்ள கட்டடத்தின் பின்புலம் என்ன?

ஹம்பாந்தோட்டை விமான நிலையத்திற்கு அண்மையில் “CHINA SW” வடிவில் நிமாணிக்கப்பட்டுள்ள கட்டடத்தின் பின்புலம் என்ன?

எழுத்தாளர் Staff Writer

11 Aug, 2020 | 10:32 pm

Colombo (News 1st) கூகுள் வரைபடத்தின் செய்மதி நிழற்படம் ஊடாக பெரிதாக்கப்பட்ட ஹம்பாந்தோட்டையின் இரண்டு இடங்களின் நிர்மாணம் தொடர்பாக ஏற்பட்டுள்ள விவாதத்திற்குரிய நிலைமை குறித்து இன்று பத்திரிகை செய்திகளில் தகவல் வௌியாகியிருந்தது.

பத்திரிகைகள் வௌியிட்டுள்ள செய்திகளின் பிரகாரம், கூகுள் வரைபடத்தின் ஊடாக பெறப்பட்ட ஒரு நிழற்படத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்து CHINA SW என கண்ணில் படும் வகையில் வானுயர் கட்டடங்கள் சில நிர்மாணிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

மத்தளை விமான நிலையத்தை அண்மித்துள்ள ஓரிடத்தில் China Harbour Engineering Company நிறுவனத்தின் பெயர் சுருக்கமாக குறிப்பிடப்பட்டு CHEC ஆகிய ஆங்கில எழுத்துக்கள் வானுயர விளங்கும் வகையில் மற்றொரு நிர்மாணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிர்மாணங்களை அண்மித்து விமானமொன்றின் உருவத்துடனான மற்றுமொரு நிர்மாணத்தையும் காண முடிகிறது.

CHINA SW என கண்ணுக்கு புலப்படும் இடத்தில் நிர்மாணங்கள் சீன இதயத்தின் அடையாளமாகவும், SLK ஆகிய எழுத்துக்களைக் கொண்ட நிர்மாணமொன்று திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிழற்படம் தொடர்பாக கொழும்பிலுள்ள சீன தூதுவரின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், குறித்த நிறுவனங்களுக்கு கட்டடங்கள் போதுமானதாக இல்லை என்பதால் நிர்மாணங்கள் விரிவாக்கப்பட்டதாக சீன தூதுவராலயம் கூறியுள்ளது.

இது அபிவிருத்தியின் காதல் கதை என சீன தூதுவராலயம் விடுத்த டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீன வௌிவிவகார அமைச்சர் Zhao Lijian நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

ராஜபக்ஸ பதவியேற்றமைக்கு சீனா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதாகவும் பிரதமர்  Li Keqiang தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைத்துள்ளதாகவும் Zhao Lijian குறிப்பிட்டார்.

கடந்த நாட்களில் சீனா மற்றும் இலங்கைக்கு இடையில் இணக்கப்பாட்டு ஒப்பந்தங்கள் இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் காணப்படுகின்றன. இருதரப்பு சிநேகப்பூர்வ உறவும் வலுவாகக் காணப்படுகின்றது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல துறைகளிலும் பலமாகக் காணப்படுகின்றன. ஆழமான உறவு காணப்படுகின்றது. COVID பரவலின் போது இரு நாடுகளும் அந்நியோன்யத்துடன் செயற்பட்டன. பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையில் நீண்டகாலமாக சிறந்த உறவு உள்ளது

என  Zhao Lijian தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்