ராணா டகுபதி திருமணம்: 30 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்

ராணா டகுபதி திருமணம்: 30 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்

ராணா டகுபதி திருமணம்: 30 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்

எழுத்தாளர் Bella Dalima

11 Aug, 2020 | 4:42 pm

தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, மிஹீகாவைக் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ராணா டகுபதி 2010-இல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் தான் இவரை புகழின் உச்சத்திற்குக் கொண்டு நிறுத்தியது. ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தன்னுடைய காதலியை சமீபத்தில் அறிமுகப்படுத்தினார் ராணா டகுபதி. மிஹீகா பஜாஜின் புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டு எனக்கு சம்மதம் சொன்னார் என ராணா குறிப்பிட்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா, டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோவின் நிறுவனர். மே 21 அன்று இரு குடும்பத்தினரும் சந்தித்து திருமணம் பற்றி விவாதித்தார்கள்.

ஆகஸ்ட் 8 அன்று ஹைதராபாத்தில் ராணா டகுபதி – மிஹீகா திருமணம் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இத்திருமணத்தில் 30 பேர் மட்டுமே கலந்துகொண்டார்கள்.

நடிகர்கள் வெங்கடேஷ், ராம் சரண், அல்லு அர்ஜூன், நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா போன்றோரும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

திருமணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்