by Staff Writer 11-08-2020 | 8:14 AM
Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று (11) தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
அலரி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இன்று காலை 10 மணியளவில் பிரதமர் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக பிரதமரின் செயலாளர் காமினி செனரத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 13 ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்.
கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது.
குருநாகலில் போட்டியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ 527,364 விருப்பு வாக்குகளை பெற்று சாதனை வெற்றியை பதிவு செய்தார்.