நாட்டில் 2871 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 2871 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 11-08-2020 | 7:54 AM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,871 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (10) 27 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய நால்வரும் சேனபுர புனர்வாழ்வு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 23 பேரும் நேற்று COVID - 19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் 2,593 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.