தலைமைத்துவம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி அறிக்கை 

தலைமைத்துவம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி அறிக்கை 

தலைமைத்துவம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி அறிக்கை 

எழுத்தாளர் Staff Writer

11 Aug, 2020 | 1:09 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசிய கட்சிக்குப் புதிய தலைமைத்துவம் அவசியமென கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தௌிவாக எடுத்துரைத்துள்ளதாக அந்தக் கட்சி இன்று (11) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் செயற்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (10) நடைபெற்ற கலந்துரையாடலின் போது, கட்சித் தலைவர் இதனைக் கூறியதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய தலைமைத்துவம் தொடர்பில், குறித்த குழுக்கள் அவற்றுக்கிடையில் கலந்துரையாடி அடுத்த செயற்குழு கூட்டத்தில் அறிவிக்க வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

கட்சியை முழுமையாக மறுசீரமைத்து வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வதற்கான திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய கலந்துரையாடலில் சுட்டிக்காட்டியதாக கட்சி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்