ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பிரச்சினைக்கு தீர்வு

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பிரச்சினைக்கு தீர்வு

எழுத்தாளர் Staff Writer

11 Aug, 2020 | 9:13 pm

Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வது தொடர்பாக ஏற்பட்டிருந்த பிரச்சினை இன்று பிற்பகலில் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்க அதன் தலைவரான சஜித் பிரேமதாசவிற்கு சந்தர்ப்பம் அளிப்பதற்கு பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இணங்கியமையே அதற்குக் காரணமாகும்.

தேசியப் பட்டியலுக்கு 7 உறுப்பினர்களைத் தெரிவு செய்வது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று அத்துல்கோட்டேயிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் கூடி பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையினையடுத்து, தேசியப் பட்டியல் சர்ச்சையை தமக்குள் ஒற்றுமையாகத் தீர்த்துக்கொள்வதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்