அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் மீது தடை விதிக்கும் சீனா

அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் மீது தடை விதிக்கும் சீனா

அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் மீது தடை விதிக்கும் சீனா

எழுத்தாளர் Staff Writer

11 Aug, 2020 | 11:48 am

Colombo (News 1st) அமெரிக்கப் பிரஜைகள் 11 பேருக்கு எதிராக தடை விதிக்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

தடை விதிக்கப்படவுள்ளோரில் செனட்டர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளும் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஹொங்கொங் மீது சீனா தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்தியதை அடுத்து, சீனப் பிரஜைகள் 11 பேருக்கு எதிராக அமெரிக்கா விதித்த தடைகளுக்குப் பதிலாக இந்தத் தடைகள் விதிக்கப்படுவதாகச் சீனா தெரிவித்துள்ளது.

குடியரசுக் கட்சியின் செனட்டர்களான Ted Cruz, Marco Rubio மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் Kenneth Roth ஆகியோரும் சீனாவினால் தடை விதிக்கப்படுபவர்களில் அடங்குகின்றனர்.

இருப்பினும் ட்ரம்ப் நிர்வாகத்திலுள்ள எவரையும் இலக்கு வைத்து சீனா தடை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்