by Staff Writer 10-08-2020 | 6:23 PM
Colombo (News 1st) குருநாகல் நகர மேயர் உள்ளிட்ட சந்தேக நபர்கள் ஐவரையும் கைது செய்யுமாறு கடந்த 7 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட அறிவித்தலை பிராந்தியத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபரினூடாக அமுல்படுத்துமாறு
குருநாகல் பிரதம நீதவான் தம்மிக்க ஹேவாவசம் இன்று (10) உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் சந்தேக நபர்கள் ஐவரும் நாட்டை விட்டு வௌியேற தடை விதித்து உத்தரவிட்ட
நீதவான், நீதிமன்ற உத்தரவை கருத்திற்கொள்ளாது மறைந்திருக்க சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் வழங்கியவர்கள் தொடர்பில் விசேட விசாரணையை முன்னெடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ விதாரண, நகர ஆணையாளர் பிரதீப் நிஷாந்த திலகரட்ண, நகர பொறியியலாளர் ஷமிந்த பண்டார, இலாலுடீன் சுல்பிகார் மற்றும் பெக்கோ இயக்குனர் லக்ஷ்மன் பிரியந்த ஆகியோரை கைது செய்யுமாறே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.