வௌ்ளை வேன் விவகாரம்: ராஜித்த சேனாரத்ன, ரூமி மொஹம்மட் ஆகியோருக்கு அழைப்பாணை 

வௌ்ளை வேன் விவகாரம்: ராஜித்த சேனாரத்ன, ரூமி மொஹம்மட் ஆகியோருக்கு அழைப்பாணை 

வௌ்ளை வேன் விவகாரம்: ராஜித்த சேனாரத்ன, ரூமி மொஹம்மட் ஆகியோருக்கு அழைப்பாணை 

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2020 | 7:05 pm

Colombo (News 1st) முன்னாள் சுகாதார அமைச்சர், டாக்டர் ராஜித்த சேனாரத்ன மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹம்மட் ஆகியோரை எதிர்வரும் 28 ஆம் திகதி மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பித்து கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று (10) உத்தரவிட்டுள்ளார்.

வௌ்ளை வேனில் இளைஞர்களை கடத்திச்சென்று கொலை செய்ததாக உண்மைக்கு புறம்பான விடயங்களை முன்வைத்து அதற்கு நிதியுதவி வழங்கியமை உள்ளிட்ட 14 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மா அதிபரினால் தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரித்த மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்