நைஜர் தாக்குதலில் பிரான்ஸ் நாட்டு நலன்புரி சேவையாளர்கள் உட்பட 8 பேர் பலி

நைஜர் தாக்குதலில் பிரான்ஸ் நாட்டு நலன்புரி சேவையாளர்கள் உட்பட 8 பேர் பலி

நைஜர் தாக்குதலில் பிரான்ஸ் நாட்டு நலன்புரி சேவையாளர்கள் உட்பட 8 பேர் பலி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

10 Aug, 2020 | 3:47 pm

Colombo (News 1st) மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரில் துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் பிரெஞ்ச் பிரஜைகள் 6 பேர், அவர்களின் பயண வழிகாட்டிகள் மற்றும் சாரதி ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோட்டார்சைக்கிள்களில் வருகை தந்த துப்பாக்கிதாரிகள் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக Tillabéri பிராந்திய ஆளுனர் தெரிவித்துள்ளார்.

ஒட்டகச்சிவிங்கிகளின் இறுதி கூட்டத்தை காண்பதற்காக மேற்கு ஆபிரிக்காவில் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் பிரெஞ்ச் பிரஜைகள் உயிரிழந்துள்ளமையை அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

சுற்றுலாப் பயணிகளாக சென்ற நலன்புரி தொழிலாளர்களே தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்