சாத்தான்குள வழக்கில் கைதான உதவி இன்ஸ்பெக்டர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு

சாத்தான்குள வழக்கில் கைதான உதவி இன்ஸ்பெக்டர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு

சாத்தான்குள வழக்கில் கைதான உதவி இன்ஸ்பெக்டர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2020 | 3:35 pm

Colombo (News 1st) இந்தியாவின் சாத்தான்குளம் வழக்கில் கைதான உதவி இன்ஸ்பெக்டர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

சாத்தான்குளத்தில் பொலிஸ் விசாரணையின் போது தந்தை மற்றும் மகன் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உட்பட 10 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த உதவி இன்ஸ்பெக்டர் பால்துறை என்பவரும் கடந்த மாதம் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

உடல்நல குறைவு காரணமாக குறித்த அதிகாரி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதன் பின்னர் கடந்த 14 ஆம் திகதி அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் CBI அதிகாரிகளும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கடந்த 24ஆம் திகதி பால்துறைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதுடன், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

இதனிடையே, இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 22 இலட்சத்தை தாண்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்