அமைச்சுக்களை உள்ளடக்கிய அமைச்சரவை கட்டமைப்பு வர்த்தமானியில் வௌியீடு 

அமைச்சுக்களை உள்ளடக்கிய அமைச்சரவை கட்டமைப்பு வர்த்தமானியில் வௌியீடு 

அமைச்சுக்களை உள்ளடக்கிய அமைச்சரவை கட்டமைப்பு வர்த்தமானியில் வௌியீடு 

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2020 | 4:35 pm

Colombo (News 1st) 28 அமைச்சுக்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்களை உள்ளடக்கிய அமைச்சரவைக் கட்டமைப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் வகிக்கப்படும் அமைச்சுக்களும் இதில் அடங்குவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சுக்கள், அமைச்சுக்களுக்குரிய விடயங்கள், சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சட்டங்கள் பற்றிய வர்த்தமானியும் இன்று (10) மாலை வெளியிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்