by Staff Writer 09-08-2020 | 1:41 PM
Colombo (News 1st) வடக்கு ரயில் மார்க்கத்தில் தாமதம் நிலவியுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் காட்டு யானை ஒன்று மோதியுள்ளது.
மாங்குளம் மற்றும் புளியங்குளம் ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ரயில் சேவையை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.