தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு

தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு

தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு

எழுத்தாளர் Staff Writer

09 Aug, 2020 | 8:15 am

Colombo (News 1st) பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர் பட்டியல் நேற்று (08) நள்ளிரவு அதிவிசேட வர்த்தமானியூடாக வௌியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற 196 வேட்பாளர்களின் பெயர்கள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் பின்னர் வௌியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் 17 பேரின் பெயர்கள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தேசியப் பட்டியல் உறுப்பினர் தொடர்பில் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் நேற்றிரவு கலந்துரையாடினர்.

எனினும் இந்த கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்ததாக கட்சியின் ஆலோசகர் பாஹியன்கல ஆனந்த தேரர் சாகர தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்