கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக விசேட போக்குவரத்து சேவை 

கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக விசேட போக்குவரத்து சேவை 

கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக விசேட போக்குவரத்து சேவை 

எழுத்தாளர் Staff Writer

09 Aug, 2020 | 9:02 am

Colombo (News 1st) பொதுத் தேர்தலை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக இன்று (09) முதல் விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு தூர இடங்களுக்கான பஸ் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதற்காக 100 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக சபையின் பிரதி பொது முகாமையாளர் A.H. பண்டுக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பயணிகளின் வசதி கருதி விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கூறியுள்ளது.

மேலதிகமாக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், நெரிசலின்றி பயணிக்க முடியும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிரெண்டா தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்