களுத்துறையில் மின் விநியோகம் துண்டிப்பு

களுத்துறையில் மின் விநியோகம் துண்டிப்பு

களுத்துறையில் மின் விநியோகம் துண்டிப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Aug, 2020 | 11:20 am

Colombo (News 1st) களுத்துறை – வஸ்கடுவ பகுதியில் சுமார் 1,000 வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த லொறியொன்று வீதியை விட்டு விலகி அதிவலு கொண்ட மின்கம்பியுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தினால் மின்கம்பிகள் அறுந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்