எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினரை தெரிவுசெய்வதில் தாமதம்

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினரை தெரிவுசெய்வதில் தாமதம்

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினரை தெரிவுசெய்வதில் தாமதம்

எழுத்தாளர் Staff Writer

09 Aug, 2020 | 2:16 pm

Colombo (News 1st) எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியில் உறுப்பினர் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை.

தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு தமது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சேதினிகம விமலதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல் உறுப்பினர் தொடர்பில் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் நேற்றிரவு கலந்துரையாடினர்.

எனினும் இந்த கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்ததாக கட்சியின் ஆலோசகர் பாஹியன்கல ஆனந்த தேரர் சாகர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் இன்று மாலை மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கட்சியின் ஆலோசகர் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்