லெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும்

லெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும் என எச்சரிக்கை

by Bella Dalima 08-08-2020 | 3:49 PM
Colombo (News 1st) பெய்ரூட் வெடிச்சம்பவத்தின் பின்னர் லெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும் என ஐக்கிய நாடுகளின் முகவர் நிலையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. வெடிச்சம்பவத்திற்கு முன்னரே லெபனான் பாரிய பொருளாதார வீழச்சியை எதிர்நோக்கியிருந்தது. பெய்ரூட் இரசாயனத் துறைமுக களஞ்சியசாலையொன்றில் இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் 154 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன், 5000 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன், மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ள நிலையில் சுமார் 05 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இந்த வெடிச்சம்பவம் தொடர்பிலான சர்வதேச விசாரணைகளுக்கான அழைப்புகளை லெபனான் ஜனாதிபதி Michel Aoun நிராகரித்துள்ளார். இதனிடையே, பெய்ரூட் வெடிச்சம்பவம் தொடர்பில் 16 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.