தேசியப்பட்டியல் உறுப்பினர் விபரங்கள் கோரல்

தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் விபரங்களை 7 நாட்களுக்குள் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

by Bella Dalima 08-08-2020 | 3:32 PM
Colombo (News 1st) தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அடுத்த ஏழு நாட்களுக்குள் வழங்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது. இம்முறை பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுக்கொண்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 17 தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளதுடன், கட்சியின் பெயர்ப்பட்டியல் நேற்று (07) மாலை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்திக்கு 7 தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன. தேசிய மக்கள் சக்தி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், எமது மக்கள் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலா ஒரு தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன. இதனிடையே, 2020 பொதுத்தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளவர்களின் பெயர் பட்டியலை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தலை விரைவில் வௌியிட நடவடிக்கை எடுப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பெயர் விபரங்களை மாவட்ட ரீதியாக பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.