நாளை விசேட போக்குவரத்து சேவை

சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் கொழும்பு திரும்ப நாளை விசேட போக்குவரத்து சேவை

by Bella Dalima 08-08-2020 | 3:42 PM
Colombo (News 1st) பொதுத் தேர்தலுக்காக சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் கொழும்பிற்கு திரும்புவதற்காக நாளை (09) காலை முதல் விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. நேர அட்டவணைக்கு இணங்க சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு மேலதிகமாக ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் மேலும் 100 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக்க தெரிவித்துள்ளார். மேலும் அதிகளவு மக்கள் வருகை தரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படும் நகர்ப்பகுதிகளுக்கு கொழும்பில் இருந்து பஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, விசேட போக்குவரத்து சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கமாண்டர் திலான் மிருண்டா தெரிவித்துள்ளார். இந்த ​சேவை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி பயணங்களில் ஈடுபடுமாறு பொதுமக்கள் மற்றும் பஸ் ஊழியர்களைக் கேட்டுக்கொள்வதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.