புதிய பாராளுமன்றத்தில் அமரப்போகும் உறவுக்கார அரசியல்வாதிகள்

புதிய பாராளுமன்றத்தில் அமரப்போகும் உறவுக்கார அரசியல்வாதிகள்

புதிய பாராளுமன்றத்தில் அமரப்போகும் உறவுக்கார அரசியல்வாதிகள்

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2020 | 10:05 pm

Colombo (News 1st) நாட்டின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்கள் தெரிவாகிவிட்டனர்.

இந்த பாராளுமன்றத்தில் விசேட அம்சங்கள் பல பொதிந்துள்ளன.

தந்தையர்கள் சிலர் புதல்வர்களுடன் பாராளுமன்ற அமர்வில் பங்கெடுக்கவுள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரான நாமல் ராஜபக்ஸ

சமல் ராஜபக்ஸவின் புதல்வரான ஷஷீந்திர ராஜபக்ஸ

தினேஷ் குணவர்தனவின் புதல்வராக யதாமினி குணவர்தன

ஜனக பண்டார தென்னகோனின் புதல்வரான பிரமித்த பண்டார தென்னகோன்

ஆகியோர் இம்முறை பாராளுமன்றத்தில் ஒன்றாக அமரவுள்ளனர்.

இதேவேளை, பிரபல அரசியல் தலைவர்களின் உறவினர்கள் பலரும் இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரர் சமல் ராஜபக்ஸ

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரியின் மகன் நிபுண ரணவக்க

மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் புதல்வர் சஜித் பிரேமதாச

முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகரவின் புதல்வர் காஞ்சன விஜேசேகர

முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத்தின் புதல்வர் கனக ஹேரத்

மறைந்த முன்னாள் பிரதமர் டி.எம் ஜயரட்னவின் புதல்வர் அனுராத ஜயரத்ன

முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகமவின் உறவினரின் மகன் திலும் அமுனுகம

மறைந்த முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க

மறைந்த முன்னாள் அமைச்சர் அனுருத்த ரத்வத்தவின் புதல்வர் லொஹான் ரத்வத்த

மறைந்த முன்னாள் அமைச்சர் டொக்டர் ஜயலத் ஜயவர்தனவின் புதல்வர் காவிந்த ஜயவர்தன

மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெர்டி பிரேமலால் திசாநாயக்கவின் புதல்வர் துமிந்த திசாநாயக்க

மறைந்த முன்னாள் அமைச்சர் ரெஜி ரணதுங்கவின் புதல்வர் பிரசன்ன ரணதுங்க

மறைந்த முன்னாள் அமைச்சர் கலாநிதி ரிச்சட் பத்திரணவின் புதல்வர் ரமேஷ் பத்திரண

முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சொய்ஸாவின் மனைவி முதிதா பிரசாந்தி

மறைந்த முன்னாள் அமைச்சர் அமரசிறி தொடம்கொடவின் புதல்வர் இசுரு தொடம்கொட

மறைந்த முன்னாள் அமைச்சர் அமரசிறி தொடம்கொடவின் சகோதரியின் புதல்வரான சந்திம வீரக்கொடி

மறைந்த முன்னாள் பிரதியமைச்சர் H.G.G. நெல்சனின் புதல்வர் கிங்ஸ் நெல்சன்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மொஹான் சாலிய எல்லாவலவின் புதல்வர் அகில எல்லாவல

மறைந்த முன்னாள் பிரதியமைச்சர் தர்மதாஸ வன்னிஆரச்சியின் புதல்வி பவித்ரா வன்னிஆரச்சி

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வர் ஜீவன் தொண்டமான்

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹீன்மஹத்தயா லியனகேவின் புதல்வர் வருண லியனகே

மறைந்த முன்னாள் அமைச்சர் காமினி அத்துகோரளவின் சகோதரி தலதா அத்துகோரள

முன்னாள் அமைச்சர் சரத்சந்திர ராஜகருணாவின் புதல்வர் ஹர்ஷன ராஜகருணா

மறைந்த முன்னாள் பராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ கவிரத்னவின் மனைவி ரோஹினி கவிரத்ன விஜேரத்ன

முன்னாள் அமைச்சர் கலாநிதி ஜகத் பாலசூரிய மற்றும் முன்னாள் ஆளுநர் குமாரி பாலசூரியவின் புதல்வர் தாரக பாலசூரிய

இலங்கை மக்கள் கட்சியின் ஆரம்ப செயலாளர் ரஞ்சித் நவரத்னவின் புதல்வர் அசங்க நவரத்ன

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் D.V. உபுலின் புதல்வர் D.V. சான

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலத்தின் புதல்வர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் உறவினர் முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன்

மறைந்த முன்னாள் பிரதியமைச்சர் தயா டீ.பெஸ்குவலின் சகோதரரின் புதல்வர் அனுப பெஸ்குவல்

மறைந்த முன்னாள் பிரதியமைச்சர் ரூபா கருணாதிலக்கவின் உறவினர் மகன் கயந்த கருணாதிலக்க

ஊவா மாகாணத்தின் முன்னாள் அமைச்சர் அனுர விதான கமகேவின் சகோதரர் தேனுக விதான கமகே

மறைந்த முன்னாள் பிரதியமைச்சர் H.R.மித்ரபாலவின் புதல்வர் துஷ்மந்த மித்ரபால

முன்னாள் அமைச்சர் அதாவுட செனவிரத்னவின் உறவினர் மகன் உதயகாந்த குணதிலக்க

மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.வின்சன்ட் பெரேராவின் புதல்வர் சுஜித் சஞ்சய பெரேரா

மறைந்த முன்னாள் அமைச்சர் S.D.R. ஜயரத்னவின் புதல்வர் பியங்கர ஜயரத்ன

94 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி வாகன விபத்தில் பலியான கொட்ஃப்ரி பெர்னாண்டோவின் உறவினர் மகன் அருந்திக பெர்னாண்டோ

மறைந்த முன்னாள் அமைச்சர் பெஸ்டஸ் பெரேராவின் புதல்வர் நிரோஷன் பெரேரா

மறைந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் A.C.S. ஹமீடின் மருமகன் அப்துல் ஹலீம் மொஹமட்

முன்னாள் பிரதியமைச்சர் H.B.சேமசிங்கவின் புதல்வர் ஷெஹான் சேமசிங்க

முன்னாள் பிரதியமைச்சர் S.W.அலவத்துவலவின் புதல்வர் J.C.அலவத்துவல

முன்னாள் மாகாண சபை உறுப்பினர், கொல்லப்பட்ட தேஷபந்து நாமல் குணவர்தனவின் சகோதரி கோகிலா ஹர்ஷனி குணவர்தன

இலங்கை மக்கள் கட்சியின் மறைந்த தலைவர் விஜயகுமாரதுங்கவின் உறவினர் மகன் ரஞ்சன் ராமநாயக்க

மறைந்த முன்னாள் அமைச்சர் சாலிந்த திசாநாயக்கவின் மனைவி மஞ்சுளா திசாநாயக்க

மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேவின் மனைவி சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே

முன்னாள் நிதியமைச்சர் கலாநிதி N.M.பெரேராவின் உறவினர் மகன் பேராசிரியர் திஸ்ஸ விதாரண

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஶ்ரீ லால் விக்ரமசிங்கவின் மனைவி ராஜிகா விக்ரமசிங்க

தேசியப் பட்டியல் மற்றும் மக்களின் வாக்குகளால் தெரிவாகியுள்ள இந்த உறவுக்கார அரசியல்வாதிகளை புதிய பாராளுமன்றத்தில் காண முடியும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்