தோல்வியடைந்தவர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் இடமில்லை: சஜித் பிரேமதாச

by Bella Dalima 08-08-2020 | 8:23 PM
Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கட்சியின் தலமையகத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது, நாட்டின் அரசியல் வரலாற்றில் பாரிய அரசியல் புரட்சிக்கு வித்திட்டு 27,71,990 வாக்குகளை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார். இந்த மக்கள் ஆணையுடன் நாட்டின் வரலாற்றில் பாரிய ஜனநாயகப் புரட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச கூறினார்.
சுற்றிவளைத்து கல் எறிந்த போது எம்மால் பலமான பயணமொன்றை ஆரம்பிக்க முடிந்தது. பொய்யை தோல்வியடைச் செய்து உண்மையை எம்மால் வெற்றி பெறச் செய்ய முடிந்தது. குறுகிய காலத்திற்குள் நாம் இவ்வாறு மக்கள் பலத்தைப் பெற்றுக்கொண்டுள்ளோம். எனவே, எமக்கு சிறந்த எதிர்காலப் பயணம் உள்ளதாக நான் நினைக்கின்றேன். அனைத்து மக்களையும் இணைத்துக் கொண்டு உறுதியான பயணத்தை தொடரவுள்ளோம்
என சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். மேலும், தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடி வருவதாகவும் தேர்தலில் தோல்வியடைந்தவர்களை தேசியப் பட்டியலில் உள்வாங்கப் போவதில்லை எனவும் அவர் கூறினார்.