ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாழ்த்து

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாழ்த்து

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாழ்த்து

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2020 | 4:10 pm

Colombo (News 1st) தேர்தல் வெற்றிக்காக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி வாயிலாக அவர் இந்த வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இருதரப்பும் முன்னெடுத்த விஜயங்களின் போது, இரு நாடுகளும் பதிவு செய்த சுவடுகளை நினைவுபடுத்திப் பார்ப்பதாகத் தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஸ, அந்த ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் பேணுவதாக ட்வீட் செய்துள்ளார்.

இதேவேளை, எதிர்காலத்தில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசி மூலம் விடுத்த அழைப்பின் பின்னர், மஹிந்த ராஜபக்ஸ ட்விட்டரில் இதனைப் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்த மஹிந்த ராஜபக்ஸ, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தி முன்கொண்டு செல்ல எதிர்ப்பார்ப்பதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்