சிறுபோக அறுவடையில் 600 தொன் நெல் கொள்வனவு

சிறுபோக அறுவடையில் 600 தொன் நெல் கொள்வனவு

சிறுபோக அறுவடையில் 600 தொன் நெல் கொள்வனவு

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2020 | 4:30 pm

Colombo (News 1st) சிறுபோக அறுவடையில் 600 தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்திலேயே அதிகத் தொகை நெல் கொள்வனவு செய்யப்பட்டதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் பணிப்பாளர் ஜட்டால் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் 400 தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, எதிர்வரும் வாரம் முதல் ஈரப்பதனுடனான நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென நெல் சந்தைப்படுத்தல் சபையின் பணிப்பாளர் ஜட்டால் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

ஈரப்பதத்துடனான நெல் ஒரு கிலோகிராம் 44 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்