ஷானி அபேசேகரவிற்கு 20 ஆம் திகதி வரை விளக்கமறியல்

ஷானி அபேசேகரவிற்கு 20 ஆம் திகதி வரை விளக்கமறியல்

ஷானி அபேசேகரவிற்கு 20 ஆம் திகதி வரை விளக்கமறியல்

எழுத்தாளர் Bella Dalima

07 Aug, 2020 | 5:20 pm

Colombo (News 1st) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா பிரதம நீதவான் மஞ்சுள கருணாரத்ன முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு சொந்தமானதென தெரிவித்து T56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து போலி சாட்சிகளை முன்வைத்த குற்றச்சாட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா – கலஹெட்டிஹேன பகுதியில் வீடொன்றின் பின்புறத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த குறித்த துப்பாக்கிகளைக் கைப்பற்றிய ஷானி அபேசேகர உள்ளிட்ட அதிகாரிகள், போலி சாட்சிகளை நீதிமன்றத்தில் முன்னிறுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்