பொதுத் தேர்தலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி 

பொதுத் தேர்தலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி 

பொதுத் தேர்தலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி 

எழுத்தாளர் Staff Writer

07 Aug, 2020 | 7:19 am

Colombo (News 1st) 2020 பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிகளவான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

இம் முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 145 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

நாடளாவிய ரீதியில் 68,53,693 வாக்குகளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இம்முறை பெற்றுக் கொண்டது.

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 59.89 வீத வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்திக்கு 27,71,984 வாக்குகள் கிடைத்துள்ளதுடன் 54 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்திக்கு தேசிய பட்டியலில் கிடைத்த ஆசனங்களின் எண்ணிக்கை 5 ஆகும்.

​2020 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்திக்கு 23.90 வீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி இம்முறை பொதுத் தேர்தலில் 3,27,168 வாக்குகளை பெற்றுள்ளது.

2.82 வீத வாக்குகளை பெற்றுள்ள இலங்கை தமிழரசு கட்சி 10 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 4,45,958 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இம்முறை ஒரு ஆசனம் கிடைத்துள்ளது.

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி 66, 579 வாக்குகளை பெற்றுக் கொண்டது.

எவ்வாறாயினும் இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், 4 தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சிக்கு இம்முறை எந்தவொரு ஆசனமும் கிடைக்கவில்லை.

இம்முறை பொதுத் தேர்தலில், நாடளாவிய ரீதியில் 2,49,435 வாக்குகளையே ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொண்டது.

இது மொத்த வீதத்தில் 2.15 வீதமாகும்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க ஆகியோர் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கியதுடன், அவர்களும் தமது ஆசனங்களை இழந்தனர்.

எனினும் ஐக்கிய தேசிய கட்சிக்கு இம்முறை தேசிய பட்டியலில் ஒரு ஆசனம் வழங்கப்படவுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு தேசிய பட்டியலுடன் 2 ஆசனங்கள் கிடைக்கின்றன.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு இம்முறை தேர்தலில் இரண்டு ஆசனங்கள் கிடைத்துள்ளன.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இம்முறை 61,464 வாக்குகள் கிடைத்துள்ளன.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கு ஓர் ஆசனம் கிடைத்துள்ளது.

இதனை தவிர முஸ்லிம் தேசிய கூட்டணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஓர் ஆசனத்தை கைப்பற்றின.

ஹம்பாந்தோட்டை, காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், கண்டி, அநுராதபும், பொலன்னறுவை, மொனராகலை, பதுளை, நுவரெலியா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களின் அனைத்து தொகுதிகளிலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றது.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி 1,12,967 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 55,303 வாக்குகளையும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி 49,373 வாக்குகளையும் ஈழ மக்கள் ஜனநாயக கூட்டணி 45,797 வாக்குகைளயும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 35,927 வாக்குகளையும் பெற்று தலா ஓர் ஆசனத்தை சுவீகரித்துள்ளது.

இம் முறை நுவரெலியா, வன்னி, யாழ். தேர்தல் மாவட்டங்களில் போட்டியிட்ட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு யாழ். மாவட்டத்தில் மாத்திரம் ஓர் ஆசனம் கிடைத்துள்ளது.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றது.

69,916 வாக்குகளைப் பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி 3 ஆசனங்களை கைப்பற்றியது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி 42,524 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சக்தி 37,883 வாக்குகளையும் ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி 11,310 வாக்குகளையும் பெற்று தலா ஓர் ஆசனத்தை கைப்பற்றியுள்ளளன.

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி 86,394 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 68,681 வாக்குகளை பெற்று ஓர் ஆசனத்தையும் இலங்கை தமிழரசுக் கட்சி 39,570 வாக்குகளை பெற்று ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 3,775 வாக்குகளை பெற்றுள்ள ​போதிலும் ஆசனங்களை கைப்பற்றவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 79,460 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் 67,692 வாக்குகளை பெற்றுள்ளது. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 34,428 வாக்குகளை பெற்றுள்ளதுடன் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 33,424 வாக்குகளை பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் தலா ஓர் ஆசனத்தை கைப்பற்றியுள்ளன.

திகாமடுல்ல மாவட்டத்தில் 3 ஆசனங்களை கைப்பற்றிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு இலட்சத்து 26,012 வாக்குகளை பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தி ஒரு இலட்சத்து 02 ஆயிரத்து 274 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகியன தலா ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, புத்தளம் மாவட்டத்தில் 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 80,183 ஆசனங்களை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியது.

இம்முறை பொதுத் தேர்தலில் முஸ்லிம் தேசிய கூட்டணி 55,981 வாக்குகளை பெற்று ஓர் ஆசனத்தை சுவீகரித்தது.

புத்தளம் தேர்தல் மாவட்டத்தில், ஐக்கிய தேசிய கட்சிக்கு 7,985 வாக்குகள் கிடைத்தன.

2020 பொதுத் தேர்தலில், கேகாலை மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3,31,573 வாக்குகளை பெற்று 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 1,31,317 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியது.

தேசிய மக்கள் சக்தி 14,033 வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சி 12,168 வாக்குகளையும் பெற்றுள்ளன.

குருநாகல் தேர்தல் மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றது.

குருநாகல் மாவட்டத்தில் 6,49,965 வாக்குகளை பெற்றுக் கொண்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமன 11 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

2,44,860 வாக்குளை கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சக்தி 4 ஆசனங்களை கைப்பற்றியது.

தேசிய மக்கள் சக்தி 36,290 வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சி 26,770 வாக்குகளையும் பெற்றுக் கொண்டது.

2020 பொதுத் தேர்தலில் அநுராதபுரம் தேர்தல் மாவட்டத்தில் 3,44,458 வாக்குகளை பெற்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 7 ஆசனங்களை கைப்பற்றியது.

1,19,788 வாக்குகளை பெற்றுக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களை கைப்பற்றியது.

தேசிய மக்கள் சக்தி 24,492 வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சி 8,254 வாக்குகளையும் கைப்பற்றியுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 8,06,896 வாக்குகளை பெற்று 13 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

2,85,809 வாக்குகளை பெற்ற, ஐக்கிய மக்கள் சக்தி 4 ஆசனங்களை கைப்பற்றியது.

தேசிய மக்கள் சக்தி 61,733 வாக்குகளை பெற்று ஓர் ஆசனத்தை பெற்றுக் கொண்டதுடன் ஐக்கிய தேசிய கட்சி, 28 ஆயிரத்து 282 வாக்குகளை பெற்றது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2,80,881 வாக்குகளைப் பெற்றுக் கொண்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 6 ஆசனங்களை பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தி 51,758 வாக்குகளை பெற்று ஓர் ஆசனத்தை கைப்பற்றியதுடன், தேசிய மக்கள் சக்தி 31,362 வாக்குகளை பெற்றது.

ஐக்கிய தேசிய கட்சி 5,017 வாக்குகளை பெற்றுக் கொண்டது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன ஹம்பாந்தோட்டை தேர்தல் மாவட்டத்தில் ஆசனங்களை கைப்பற்றவில்லை.

கண்டி தேர்தல் மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 4,77,446.

கண்டி மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 8 ஆசனங்களை கைப்பற்றியது.

ஐக்கிய மக்கள் சக்தி 2,34,523 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன் 4 ஆசனங்களை கைப்பற்றியது.

கண்டி மாவட்டத்தில் 19,12 வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொண்டது.

மாத்தளை மாவட்டத்திலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றியீட்டியது.

1,88,779 வாக்குகளை பெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 4 ஆசனங்களை கைப்பற்றியது.

ஐக்கிய மக்கள் சக்தி 73,955 வாக்குகளைப் பெற்று ஒர் ஆசனத்தை கைப்பற்றயுதுடன், தேசிய மக்கள் சக்தி 7,542 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், ஐக்கிய தேசிய கட்சி 6,592 வாக்குகளை பெற்றது.

நுவரெலியா தேர்தல் மாவட்டத்திலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2,30, 389 வாக்குகளை பெற்று 5 ஆசனங்களை கைப்பற்றியது.

1 இலட்சத்து 32 ஆயிரத்து 08 வாக்குகளை பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி, 8 ஆசனங்களை கைப்பற்றியது.

ஐக்கிய தேசிய கட்சி 12,974 வாக்குகளை பெற்றதுடன், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி 6,227 வாக்குகளை பெற்றது.

பதுளை மாவட்டத்திலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3 இலட்சத்து 9,538 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி ஒரு இலட்சத்து 44, 290 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை தனதாக்கிக் கொண்டது.

பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 19,308 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், ஐக்கிய தேசிய கட்சிக்கு 9,163 வாக்குகள் கிடைத்தன.

கொழும்பு மாவட்டத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 6,74,603 வாக்குகளை பெற்றுக் கொண்டது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொழும்பு மாவட்டத்தில் 12 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3,87,145 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 67,600 வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சி 30,875 வாக்குகளையும் பெற்றது.

இலங்கை வரலாற்றில் ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக திகழ்ந்த கொழும்பு மாவட்டத்தில் இம்முறை ஒரு ஆசனமும் கைப்பற்றப்படவில்லை.

இம் முறை பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 30,875 வாக்குகள் மாத்திரமே கிடைத்தன.

இரத்தினபுரி மாவட்டத்தின் வெற்றியும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசமானது.

இரத்தினபுரி மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 4,46,668 வாக்குகளை பெற்று 8 ஆசனங்களை தனதாக்கிக் கொண்டது.

1,55,159 வாக்குகளை பெற்ற ஐக்கிய மக்கள் சக்திக்கு 3 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தில், தேசிய மக்கள் சக்திக்கு இம்முறை 17,611 வாக்குகளும் ஐக்கிய தேசிய கட்சிக்கு 12,349 வாக்குகளும் பதிவாகியுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்