பெய்ரூட் வெடிப்புச் சம்பவம்: அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பெய்ரூட் வெடிப்புச் சம்பவம்: அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பெய்ரூட் வெடிப்புச் சம்பவம்: அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

07 Aug, 2020 | 2:19 pm

Colombo (News 1st) லெபனானில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களின் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

தலைநகர் பெய்ரூட்டின் துறைமுகப் பகுதியில் ஏற்பட்ட பாரிய வெடிப்புச் சம்பவத்தை அடுத்தே, அரசாங்கத்திற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டங்கள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்றத்திற்கு அருகில் ஏராளமானவர்கள் திரண்டிருந்ததனால், அவர்களைக் கலைப்பதற்காக அதிகாரிகளினால் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பாதுகாப்பற்ற வகையில் 2,750 தொன் அமோனியம் நைட்ரேட் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமையே, கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிப்புக்குக் காரணமெனக் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த வெடிப்பினால் 137 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5000 அதிகமானோர் காயமடைந்ததை அடுத்தே, அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்