குருநாகல் மேயரை கைது செய்யுமாறு பணிப்புரை 

குருநாகல் மேயர் உள்ளிட்ட ஐவரை கைது செய்யுமாறு பணிப்புரை 

by Staff Writer 06-08-2020 | 12:47 PM
Colombo (News 1st) குருநாகல் மாநகர மேயர், நகர ஆணையாளர் மற்றும் மேலும் மூவரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நீதிமன்றத்தினூடாக பிடியாணை பெற்று இவர்களை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். குருநாகல் இரண்டாவது புவனேகபாகு மன்னரின் அரசவை காணப்பட்டதாக கூறப்படும் இடத்திலிருந்த கட்டடத்தை சேதப்படுத்தியமை தொடர்பிலேயே இவர்களை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர்ஆலோசனை வழங்கியுள்ளார். தொல்பொருள் கட்டளை சட்டம் மற்றும் பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறும் சட்ட மா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.