வாக்கெண்ணும் நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

வாக்கெண்ணும் நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

வாக்கெண்ணும் நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Aug, 2020 | 8:24 am

Colombo (News 1st) வாக்கெண்ணும் நிலையங்களை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வாக்கெண்ணும் நிலையங்களின் பாதுகாப்பிற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூரிய கூறினார்.

தேர்தல் சட்டங்களை மீறியயை தொடர்பில் நேற்று மாத்திரம் 53 மு​றைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

கள்ள வாக்குகளை அளிக்க முயற்சித்த 03 பேர் அடங்கலாக நேற்று மாத்திரம் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ​தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு ஊர்வலங்கள் செல்ல முடியாது என பொலிஸ் தலைமையகத்தின் சட்டப்பிரிவு பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்