by Bella Dalima 05-08-2020 | 7:33 PM
Colombo (News 1st) பொதுத் தேர்தல் வாக்களிப்பு நடைபெற்ற காலப்பகுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று விஜயம் செய்திருந்தார்.
ஹம்பாந்தோட்டை, மெதமுலனவில் வாக்களித்ததன் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குருநாகலுக்கு சென்றார்.
நிக்கவெரட்டிய பஸ் நிலையத்திற்கு அருகில் பிரதமர் மக்களை சந்தித்தார்.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் இதன்போது பிரதமருடன் இருந்தார்.
இதன்போது, பொதுத் தேர்தலில் தாம் மகத்தான வெற்றியைப் பெறுவது உறுதியென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.