பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம் 

by Staff Writer 05-08-2020 | 7:00 AM
Colombo (News 1st) இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது. 166 தொகுதிகளில் இருந்து 196 பேரை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கான தேர்தலின் வாக்கெடுப்பு மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளது. சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இம்முறை தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.