நாடளாவிய ரீதியில் 70 வீத வாக்குப் பதிவு

நாடளாவிய ரீதியில் 70 வீத வாக்குப் பதிவு

by Bella Dalima 05-08-2020 | 8:27 PM
Colombo (News 1st) இம்முறை பொதுத் தேர்தலுக்காக 22 மாவட்டங்களில் 12,985 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன. 196 மக்கள் பிரதிநிதிகள் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், இதற்காக 7452 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இம்முறை தேர்தலில் 1,62,63,885 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். கம்பஹா மாவட்டத்தில் அதிகப்படியாக 17,85 ,964 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஆகக் குறைந்த வாக்காளர் எண்ணிக்கையான 2,87 ,024 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 40 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் இன்று நடைபெற்ற தேர்தலில் களமிறங்கியதுடன், 312 சுயேட்சைக் குழுக்கள் தமது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாக வாக்களிப்பு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இன்றைய தேர்தலில் நாடளாவிய ரீதியில் 70 வீத வாக்களிப்பு பதிவாகியுள்ளது. வாக்களிப்பு வீதம் பின்வருமாறு கொழும்பு - 72% கம்பஹா - 69% களுத்துறை - 71% கண்டி - 71% நுவரெலியா - 75% மாத்தளை - 71% காலி - 69% மாத்தறை - 71% ஹம்பாந்தோட்டை - 73% அநுராதபுரம் - 71% பொலன்னறுவை - 71% திருகோணமலை - 74% மட்டக்களப்பு - 72% திகாமடுல்ல - 72% பதுளை - 74% மொனராகலை - 74% மன்னார் - 79.49% வவுனியா - 74% முல்லைத்தீவு - 76.25% யாழ்ப்பாணம் - 69% குருநாகல் - 69% புத்தளம் - 63% இரத்தினபுரி - 73% கேகாலை - 71%    

ஏனைய செய்திகள்