தேர்தல் பாதுகாப்பு கடமையில் 70,000 பொலிஸார் 

தேர்தல் பாதுகாப்பு கடமையில் 70,000 பொலிஸார் 

by Staff Writer 05-08-2020 | 8:13 AM
Colombo (News 1st) வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜேசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை பொலிஸின் 70,000 உத்தியோகத்தர்கள், உத்தியோகபூர்வ ஆடையுடன் உரிய ஆலோசனையின் கீழ் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 12,985 வாக்களிப்பு நிலையங்கள், 80 ஆயிரம் வாக்கெண்ணும் நிலையங்கள், மூவாயிரத்து 66 பொலிஸ் நடமாடும் சேவைகள், நான்காயிரத்து 94 பொலிஸ் பிரிவுகளிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் வாக்களிப்பை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் கால எல்லைக்குள், வாக்கெண்ணும் நிலையங்களின் வளாகங்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார். வாக்களிப்பு நிறைவடைந்த உடனேயே வாக்குப் பெட்டிகளை வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் போதும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.