வாக்களிப்பதை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தல்

வாக்களிப்பதை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தல்

வாக்களிப்பதை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தல்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

05 Aug, 2020 | 2:26 pm

Colombo (News 1st) பொதுத் தேர்தலில் வாக்களிப்பதை நிழற்படமெடுத்தல் அல்லது காணொளியாக சமூகவலைத்தளங்களில் பதிவேற்றுவதை தவிர்க்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவினால் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

வாக்களிப்பதை நிழற்படமெடுத்தல் அல்லது காணொளியாக சமூகவலைத்தளங்களில் பதிவேற்றுதல் தேர்தல் சட்டமீறல் எனவும் அறிக்கையினூடாக மஹிந்த தேஷப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்குமாறு சமூகவலைத்தள பாவனையாளர்கள் மற்றும் நிறுவனங்களிடம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்