பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம் 

பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம் 

எழுத்தாளர் Staff Writer

05 Aug, 2020 | 7:00 am

Colombo (News 1st) இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது.

166 தொகுதிகளில் இருந்து 196 பேரை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கான தேர்தலின் வாக்கெடுப்பு மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளது.

சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இம்முறை தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்