தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் 10,000 அதிகாரிகள் 

தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் 10,000 அதிகாரிகள் 

தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் 10,000 அதிகாரிகள் 

எழுத்தாளர் Staff Writer

05 Aug, 2020 | 8:52 am

Colombo (News 1st) பொதுத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 10,000 இற்கும் அதிகமான அதிகாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு நிலையம் அறிவித்துள்ளது.

அமைதிக் காலப்பகுதியில் 80 இற்கும் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக Paffrel அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

அவற்றில் சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பிலான 2 முறைப்பாடுகள் அடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமைதிக் காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சமூகவலைத்தளங்களின் ஊடாக பிரச்சாரத்தில் ஈடுபட்டோர் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக Paffrel அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாடுகள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்