TikTok கொடுக்கல் வாங்கலின் ஒரு பகுதி திறைசேரிக்கு

TikTok அமெரிக்காவிடம் விற்கப்பட்டால் கொடுக்கல் வாங்கலின் ஒரு பகுதி திறைசேரிக்கு வழங்கப்பட வேண்டும்: ட்ரம்ப் அறிவிப்பு

by Bella Dalima 04-08-2020 | 7:49 PM
Colombo (News 1st) TikTok செயலியை அமெரிக்க நிறுவனம் கொள்வனவு செய்தால், இடம்பெறுகின்ற கொடுக்கல் வாங்கல்களில் பரிமாறப்படுகின்ற பணத்தில் ஒரு தொகைப் பணம் அந்நாட்டின் திறைசேரிக்கு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். TikTok செயலியை அமெரிக்க நிறுவனம் கொள்வனவு செய்யுமிடத்து, விற்பனை வரி அறவிடப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அத்துடன், சீனாவிற்கு சொந்தமான குறித்த செயலி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி தடை செய்யப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். TikTok உட்பட சீனாவின் பல செயலிகள் முலம் பல்வேறு தரவுகளை சட்டவிரோதமாக சீனா பெற்றுக்கொள்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளதுடன், குறித்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.