28 வருடங்களுக்குப் பிறகு இணையும் பாரதிராஜா – இளையராஜா

28 வருடங்களுக்குப் பிறகு இணையும் பாரதிராஜா – இளையராஜா

28 வருடங்களுக்குப் பிறகு இணையும் பாரதிராஜா – இளையராஜா

எழுத்தாளர் Bella Dalima

04 Aug, 2020 | 4:32 pm

பாரதிராஜாவும் இளையராஜாவும் 1992 ஆம் ஆண்டு கடைசியாக நாடோடித் தென்றல் படத்தில் இணைந்து பணியாற்றிய பின்னர் மீண்டும் இணையவுள்ளார்கள்.

மீண்டும் ஒரு மரியாதை படத்திற்கு அடுத்ததாக, ஆத்தா என்கிற படத்தை இயக்கவுள்ளார் பாரதிராஜா. கொரோனா அச்சுறுத்தல் முடிவடைந்த பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமாரின் கதையை பாரதிராஜா இயக்கவுள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார்.

இளையராஜாவிடம் கதையைச் சொல்ல பாரதிராஜா தயாராக இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார் இளையராஜா. எனினும், படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

28 வருடங்களுக்குப் பிறகு பாரதிராஜா – இளையராஜா மீண்டும் இணைவதால் படத்தின் பாடல்கள் குறித்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்