பூனைக்கு என்ன நடந்தது?

ஹெரோயின் பொதி கட்டப்பட்டு சிறைச்சாலைக்குள் அனுப்பப்பட்ட பூனைக்கு என்ன நடந்தது?

by Staff Writer 04-08-2020 | 8:26 PM
Colombo (News 1st) ஹெரோயின் அடங்கிய பொதியொன்றை பூனையின் கழுத்தில் கட்டி பொரளை மெகசின் சிறைச்சாலைக்குள் கொண்டு செல்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சியை சிறைச்சாலை அதிகாரிகள் முறியடித்திருந்தனர். ஹெரோயின் அடங்கிய பொதி கழுத்தில் கட்டப்பட்டிருந்த பூனை ஒன்றை கடந்த சனிக்கிழமை மாலை 4.30 அளவில் சிறைச்சாலையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 1.7 மில்லிகிராம் ஹெரோயின், இரண்டு சிம் அட்டைகள், மெமரி சிப் ஒன்று என்பன அதன் கழுத்தில் கட்டப்பட்டிருந்தன. இந்தப் பூனை மெகசின் சிறைச்சாலையில் உலாவும் பிராணி என்று சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். எவ்வாறாயினும், ஹொரோயினுடன் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, பூனையை தடுத்து வைக்கவில்லை எனவும் அது தற்போதும் சிறைச்சாலை வளாகத்தில் சுதந்திரமாக உலாவித் திரிவதாகவும் சந்தன ஏக்கநாயக்க கூறினார். சட்டவிரோதமாக போதைவஸ்தைக் கொண்டு செல்ல பூனையைப் பயன்படுத்திய நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.