30 பேருக்கு வரியற்ற சம்பளம்: EconomyNext அறிக்கை

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தில் பணியாற்றும் 30 பேருக்கு வரியற்ற சம்பளம்: EconomyNext அறிக்கை

by Staff Writer 04-08-2020 | 8:33 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தில் பணியாற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 30 பேருக்கு வரியற்ற சம்பளத்தைக் கொடுக்க இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக EconomyNext அறிக்கை ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது. வௌிநாடுகளில் இருந்து வந்து துறைமுக நகரத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கே வரியற்ற சம்பளத்தை வழங்க அரசாங்கம் தயாராவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுக நகரத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலத்தில் நிறைவேற்று அதிகாரிகள் 30 பேருக்கு வரியற்ற சம்பளத்தை வழங்க அரசாங்கம் தயாராவது வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்ட அபிவிருத்தி திட்ட சட்டங்களுக்கு அமைவாகவே என EconomyNext அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த ஊழியர்கள் உழைக்கும் போது அவர்கள் வழங்கும் வரி மற்றும் தனியார் வருமான வரி நீக்கப்படவுள்ளது. வௌிநாட்டவர்களுக்கு இந்தளவிற்கு வரியற்ற சம்பளத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராவது எதனை இலக்கு வைத்து என்பது தௌிவில்லை என EconomyNext அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு ஆசியாவில் விரைவாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்காக வௌிநாட்டவர்கள் வரும்போது அவர்கள் சகலரும் வரி செலுத்துவதாக கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர். சிங்கப்பூரில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட காலத்தில் 2500 வௌிநாட்டவர்கள் ஊழியர்களாக வருவதற்கு அந்த நாட்டில் இடமளிக்கப்படவில்லை என்பதுடன், எவரேனும் ஒருவர் அதிக சம்பளத்தைப் பெறுவாரானால் அவர் நிரந்தர வதிவிடத்தைப் பெற்றவராக இருக்க வேண்டும் என EconomyNext அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.