புதிய பாராளுமன்றம் 20 ஆம் திகதி கூடவுள்ளது

புதிய பாராளுமன்றம் எதிர்வரும் 20 ஆம் திகதி கூடவுள்ளது 

by Staff Writer 04-08-2020 | 7:13 AM
Colombo (News 1st) நாளை (05) நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை தொடர்ந்து எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது. அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி நேற்று (03) நள்ளிரவு வௌியிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.