சந்தேகத்திற்கிடமான சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பில் விசாரணை

சந்தேகத்திற்கிடமான சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பில் விசாரணை

சந்தேகத்திற்கிடமான சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பில் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2020 | 10:03 am

Colombo (News 1st) சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் சிறைச்சாலை அதிகாரிகள் குறித்து புலனாய்வு பிரிவினரூடாக தகவல்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான அதிகாரிகள் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனரா என்பது தொடர்பில் கடுமையாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷாரா உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

அரச புலனாய்வு பிரிவினரும் சிறைச்சாலைகள் புலனாய்வு பிரிவினரும் இணைந்து விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளையும் மையப்படுத்தி இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷாரா உபுல்தெனிய மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்