by Staff Writer 03-08-2020 | 7:14 PM
Colombo (News 1st) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொது செயலாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ். செல்லச்சாமியின் இறுதிக்கிரியை இன்று (03) நடைபெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான காலஞ்சென்ற எம்.எஸ். செல்லச்சாமியின் பூதவுடல் கொழும்பிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
அன்னாரின் பூதவுடலுக்கு அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் இன்று அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து, அன்னாரின் பூதவுடல் பொரளை மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான எம்.எஸ். செல்லச்சாமி தமது 94ஆவது வயதில் நேற்று முன்தினம் காலமானார்.