ஆப்கன் சிறைச்சாலை தாக்குதலில் 21 பேர் பலி

ஆப்கன் சிறைச்சாலை தாக்குதலில் 21 பேர் பலி

ஆப்கன் சிறைச்சாலை தாக்குதலில் 21 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2020 | 3:15 pm

Colombo (News 1st) ஆப்கானிஸ்தானில் படையினருக்கும் துப்பாக்கிதாரிகளுக்கும் இடையிலான மோதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த துப்பாக்கிதாரி, நங்கஹர் மாகாணத்தில் உள்ள சிறைச்சாலையை சுற்றிவளைத்த நிலையில் பாதுகாப்பு படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த மேலும் 43 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், உயிரி​ழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பு கூறியுள்ளனர்.

1,700 இற்கும் அதிக கைதிகளை கொண்ட குறித்த சிறைச்சாலையில், தலிபான்களும் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களும் அதிகளவில் உள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்